இனிய தத்துவவாதிகளே
சிந்திக்கும்போது
எனக்கு கவலை வந்துவிடுகிறது
அதுவேதான் உங்கள்
நிலையுமா?
மனிதப் புலன்களால்
தொடமுடியாததில்
எனது பற்களைப்
பதிக்க முயலும்போது
பழைய தோழி ஒருத்தி
இடையூறு செய்ய
வருகிறாள்.
“அவள் உயிருடனேயே
இல்லை!”
நான் சொர்க்கத்தைப்
பார்த்துக் கத்துகிறேன்.
குளிர்காலத்து வெளிச்சமோ
என்னை அலாதியாக்குகிறது.
ஒரேவிதமாய்த்
தோன்றும்
சாம்பல் போர்வைகள் மூடிய
படுக்கைகளைப்
பார்த்தேன்.
நிர்வாணப் பெண்ணை
அணைத்தபடி
குளிர்நீரால்
குளிப்பாட்டும்
இறுக்க முகம்கொண்ட
ஆண்களைப் பார்த்தேன்.
குளிர்நீர்
அவளது நரம்புகளை
அமைதிப்படுத்தியதா?
அல்லது
அவளுக்கு அது
தண்டனையா?
நான் எனது நண்பன்
பாப்பை
பார்ப்பதற்காகச்
சென்றேன், அவன் என்னிடம் கூறியது:
“காட்சிகளின் மயக்கத்தைக் கடப்பதன் மூலம்
நாம் மெய்மையை
அடைகிறோம்”.
அதை விலக்குவது
எனக்கு சாத்தியமே அல்ல
என்பதை நான்
உணரும்வரை
புளங்காகிதம்
கொண்டிருந்தேன்.
ஜன்னலுக்கு
வெளியே தீவிரமாய்
பார்த்துக்கொண்டிருந்த
என்னைக் கண்டேன்.
பாப்பின் தந்தையார்
அவர்களது நாயை
நடைக்கு வெளியே
அழைத்துச் சென்றார்.
அவர் வலியுடன்
நகர்ந்தார்.
நாயோ அவருக்காக
காத்திருந்தது.
பூங்காவில்
வேறு யாருமே இல்லை.
சிந்தனையைச் சிக்கலானதாய் ஆக்க
முடிவேயில்லாத
துயர வடிவங்கள்
கொண்ட
மொட்டை மரங்கள் மட்டும்.
Comments