நான் இங்கிருந்து எழுதும்போது
எனது மேஜை மற்றும்
நாற்காலி தவிர
வேறு எதுவும்
உலகத்தினுடையதாய்
இல்லையென்பதை
நான் கவனித்திருக்கவில்லை.
அதனால் நான்
கூறிக்கொண்டேன்:
(எனக்கு நான்
கேட்பதுபோல்)
ஒரு கண்ணாடிக்
குவளையோ
திராட்சை மதுவோ
பரிசாரகரோ இல்லாத
மதுவிடுதியா
இந்த இடம்?
இங்கே வெகுநேரம் எதிர்பார்க்கப்படும்
குடிபோதைக்காரனோ நான்?
இன்மையின் நிறமென்பது
நீலம்.
அதை இடதுகையால் தள்ளியபோது
கை மறைகிறது.
இருப்பினும்
நான் ஏன் அமைதியாகவும்
மிகுந்த மகிழ்ச்சியோடும்
இருக்கிறேன்?
மேஜை மேல்
ஏறுகிறேன்
(இருக்கை ஏற்கெனவே இல்லாமலாகிவிட்டது)
காலி பீர் புட்டியின்
தொண்டை வழியாக
நான் பாடுகிறேன்.
Comments