Skip to main content

தலைப்பில்லாத கவிதை – சார்லஸ் சிமிக்

 


நான் ஈயத்திடம் கேட்கிறேன்.

“ஏன் தோட்டாவாக

வார்க்கப்பட

உன்னை விட்டாய்?

ரசவாதிகளை நீ மறந்துவிட்டாயா?

பொன்னாக மாறும் நம்பிக்கையை

கைவிட்டு விட்டாயா?”

 

பதிலே இல்லை.

ஈயம். தோட்டா.

 

இப்படியான பெயர்களில்

உறக்கம் ஆழமானது

நெடியது.

Comments